வலுக்கும் குற்றச்சாட்டுகள்: மைத்ரி தொடர் மௌனம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 23 April 2019

வலுக்கும் குற்றச்சாட்டுகள்: மைத்ரி தொடர் மௌனம்!


நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்ட - ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சரெனும் நிலையில் தாக்குதல் அச்சுறுத்தல் பற்றி உளவுத்தகவல்கள் கிடைக்கப் பெற்றும், முறையான நடவடிக்கையோ தனது வெளிநாட்டுப் பிரயாணத்தின் போது மாற்றீடாக வேறு ஒருவரை குறித்த பதவிகளுக்குப் பொறுப்பாக நியமிக்கவோ தவறியுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீதான குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன.



ஆறு மாதத்திற்கு முன்பிருந்து ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் உளவுத்தகவல்களை இலங்கைக்கு வழங்கி வந்ததாக இந்திய உளவு நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும், இவ்வாறான பாரிய தாக்குதல்கள் குறித்து புலனாய்வுத்தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனவும் ஆங்காங்கு சில சம்பவங்கள் இடம்பெறக்கூடும் எனவே துப்பு கிடைத்ததாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் இன்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவசரகால நிலைமை இருக்காததனால் இராணுவத்தின் உதவி பெறப்படவில்லையெனவும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்ந்தும் மௌனித்திருப்பதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இதனை சுட்டிக்காட்டி, ஜனாதிபதியின் பாரபட்சமான நடவடிக்கைகளே தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனதற்கான காரணம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இப்பின்னணியில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா அல்லது குற்றப்பிரேரணையொன்றை நாடாளுமன்றில் கொண்டு வருவதற்கும் ஆலோசிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment