தெமட்டகொடயில் உயிரிழந்த மூவரும் விசாரணைக்காக சென்ற CID யினர் - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

தெமட்டகொடயில் உயிரிழந்த மூவரும் விசாரணைக்காக சென்ற CID யினர்


தெமட்டகொட, மஹாவில கார்டன்ஸ் பகுதயில் இரு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதாக தகவல் வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி. ருவன் குணசேகர, சம்பவத்தில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தாக்குதல் நடாத்திய சந்தேகநபர்கள் குறித்த பகுதியில் சொகுசு வாகனம் ஒன்றில் வந்திருப்பதாக வெளியான தகவலையடுத்தே அங்கு விசாரணைக்காக பொலிசார் சென்றதாகவும் இதன் போதே குறித்த அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருப்பதோடு மறு அறிவித்தல் வரை அது தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment