வெளிநாட்டினர் உட்பட 207 பேர் (இதுவரை) உயிரிழப்பு: பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

வெளிநாட்டினர் உட்பட 207 பேர் (இதுவரை) உயிரிழப்பு: பொலிஸ்!


அரச வைத்தியசாலைகளின் தகவல்களின் அடிப்படையில் வெளிநாட்டினர் உட்பட இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர்களில் பலர் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இதுவரையான உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 207 என பொலிசார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

காலை 8.45 - 9 மணிக்கிடையில் இடம்பெற்ற ஆறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் பின்னர் கொழும்பில் தெஹிவளை மற்றும் தெமட்டகொடயில் இரு குண்டுத்தாக்குல்களினால் நாடு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள அதேவேளை தற்சமயம் காலவரையறையற்ற பொலிஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment