இது 'அது' இல்லை; வெள்ளிக்கிழமை இலங்கை வருவேன்: கோட்டாபே - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

இது 'அது' இல்லை; வெள்ளிக்கிழமை இலங்கை வருவேன்: கோட்டாபே


அமெரிக்காவில் கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் தமக்கு அது குறித்த நீதிமன்ற அழைப்பாணை எதுவும் வரவில்லையென தொடர்ந்தும் மறுதலித்துள்ளார் கோட்டாபே ராஜபக்ச.


லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி இழப்பீடு கோரி தாக்கல் செய்துள்ள வழக்கு தவிர, 2007ல் கைதான சிவில் பிரஜையொருவரை துன்புறுத்தியதன் பின்னணியில் இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பல்பொருள் அங்காடியொன்றுக்குச் சென்றிருந்த கோட்டாபேயிடம் அழைப்பாணை நேரில் கையளிக்கப்பட்டதாக தெரிவித்து மேற்காணும் புகைப்படமும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் வெளியிடப்பட்டிருந்தது.  இருந்த போதிலும் தனக்கு அவ்வாறு எதுவும் தரப்படவில்லையெனவும் வெள்ளியன்று தான் இலங்கை வரவுள்ளதாகவும் கோட்டாபே சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடப் போவதாகவும் கோட்டாபே தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment