முதலில் ஜனாதிபதி தேர்தலே: துமிந்த நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Monday, 15 April 2019

முதலில் ஜனாதிபதி தேர்தலே: துமிந்த நம்பிக்கை!


இவ்வருடம் தேர்தல்களுக்கான வருடம் என வர்ணிக்கப்பட்டு வருகின்ற போதிலும் முதல் நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.


இந்நிலையில், முதலில் மாகாண சபைத் தேர்தலா, பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா எனும் வாதங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் நெருங்கிய  சகாவான துமிந்த திசாநாயக்க, முதலில் ஜனாதிபதி தேர்தலே வரப்போவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் பதவிக் காலம் பற்றி உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறிவதற்கான முயற்சியில் இறங்கப் போவதாக சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment