அடம் பிடித்த பூஜிதவுக்கு கட்டாய லீவு! - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

அடம் பிடித்த பூஜிதவுக்கு கட்டாய லீவு!


பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா செய்த போதிலும், தனது பதவியை விட்டுக்கொடுக்க மறுத்த பூஜித ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறையளித்து ஓய்வு கொடுத்துள்ளது சட்ட ஒழுங்கு அமைச்சு.ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உளவுத்தகவல்களை முறையாகக் கையாளாத குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பூஜித பெரும் பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் பதவியேற்றிருந்தவராவார். பதவிக்காலத்தின் போது பல்வேறு உள்ளக சர்ச்சைகளை சிக்கிக்கொண்ட அவரை அண்மைய தாக்குதலையடுத்து பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், பூஜித மறுத்திருந்த நிலையில் அவருக்கு பதிலாக சந்தன விக்ரமரத்னவை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதி, தனது பொறுப்பின் கீழுள்ள சட்ட-ஒழுங்கு அமைச்சு ஊடாக பூஜிதவுக்கு கட்டாய விடுமுறையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment