கல்முனை: மாலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரை ஊரடங்கு - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

கல்முனை: மாலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரை ஊரடங்கு


கல்முனை - சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பகுதிகளில் மாலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சாய்ந்தமருது சுற்றிவளைப்பில் உயிரிழந்தோர் பற்றிய விபரங்களைப் பெற்றுள்ள பொலிசார்,பிரதேசத்தில் மேலும் தேடல் நடவடிக்கைகளை முடுக்கிவட்டுள்ளனர்.

இதேவேளை, பிரதேச மக்களின் ஒத்துழைப்பூடாகவே இத்தனை  விரைவாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுவருவதாக இன்றும் மீண்டும் வலியுறுத்தி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரியொருவருக்கு சிறுமியொருவர் தண்ணீர் போத்தல் வழங்கும் காட்சியையே படத்தில் காண்கிறீர்கள்.

படம்: பாருக் ஷிஹான்

No comments:

Post a Comment