லத்தீபா உட்பட 9 பெண்கள் இதுவரை தடுத்து வைப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

லத்தீபா உட்பட 9 பெண்கள் இதுவரை தடுத்து வைப்பு


பொலிசார் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ கைது எண்ணிக்கையான 69 பேரில் ஒன்பது பெண்கள் அடங்குவதாக விளக்கமளித்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர.இதில், முன்னராக படங்களுடன் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்த தேடப்பட்டோர் பட்டியலில் காணப்பட்ட லத்தீபா உட்பட 9 பெண்கள் உட்படுவதாகவும், அமெரிக்காவில் வாழும் பெண்ணொருவருடன் படத்துடன் தவறுதலாக வெளியிடப்பட்டிருந்த பெயருக்குரியவரே சஹ்ரானின் மனைவியெனவும் புலஸ்தினி என பெயரிடப்பட்டிருந்த பெண் சாய்ந்தமருது சுற்றிவளைப்பில் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகின்றதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

முஸ்லிம் சமூகத்தினால் வழங்கப்படும் தகவல் உதவியுடனேயே விரைவாக சந்தேகநபர்களைக் கைது செய்து வருவதாக பொலிசார் பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment