பெருந்தொகை வெடிபொருட்கள் - ஆயுதங்கள்; கிழக்கிலங்கையில் பெரும் அச்சம்! - sonakar.com

Post Top Ad

Friday, 26 April 2019

பெருந்தொகை வெடிபொருட்கள் - ஆயுதங்கள்; கிழக்கிலங்கையில் பெரும் அச்சம்!


கடந்த ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து இன்று சம்மாந்துறை பகுதியில் பெருந்தொகை வெடிபொருட்கள் ஆயுதங்கள் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் பிரச்சாரப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் திரளாக வாழும் கிழக்கிலங்கையில் பெரும் அச்ச சூழ்நிலை நிலவுகிறது.தற்சமயம் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள அதேவேளை கல்முனை பகுதியில் இடம்பெற்ற சிறு வெடிப்பை ஆராயச் சென்ற பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து பிரதேசம் எங்கும் சுற்றி வளைக்கப்பட்டு தேடல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் அத்தபத்துவின் கூற்றுக்கமைய மூன்று முதல் ஆறு பேர் இவ்வாறு இராணுவத்தினருக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை பிரதேசத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் தேடல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment