நீர்கொழும்பில் வாழும் பாகிஸ்தானியர்கள் பாதுகாப்பான இடத்துக்கு நகர்வு - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

நீர்கொழும்பில் வாழும் பாகிஸ்தானியர்கள் பாதுகாப்பான இடத்துக்கு நகர்வு


பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்து புகலிடம் கோரியிருக்கும் சமூகத்தில், திருப்பியனுப்பப்படுவதற்காக காத்திருக்கும் சுமார் 600 பேர் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் வெளிநாட்டு ஊடகங்களில் வேறு விதமாகப் பதிவாகி வருவதோடு நீர்கொழும்பில் முஸ்லிம்கள் மீது பலத்த தாக்குதல்கள் இடம்பெற்றுவருவதாகவும் பதியப்படுகிறது. 

புகலிடம் மறுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருப்போது இன்று அருகிலுள்ள அஹமதியா மையம் ஒன்றுக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment