மக்கள் உயிருக்கு மதிப்புக் கொடுக்காதவர் 'மைத்ரி' : பொன்சேகா சாடல்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

மக்கள் உயிருக்கு மதிப்புக் கொடுக்காதவர் 'மைத்ரி' : பொன்சேகா சாடல்!


நாமல் குமார எனும் பொலிஸ் உளவாளி வழங்கிய கொலைத்திட்டம் பற்றிய தகவலுக்கு வழங்கிய முக்கியத்துவத்தின் சிறு அளவைக் கூட நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி வெளிநாட்டிலிருந்து கிடைத்த உளவுத் தகவலுக்கு மைத்ரிபால சிறிசேன வழங்கவில்லையென தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.இன்றைய தினம் நாடாளுமன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், தனது உயிருக்கு அத்தனை மதிப்புக் கொடுத்த மைத்ரிபால சிறிசேன பொது மக்கள் உயிருக்கு எவ்வித மதிப்பையும் கொடுக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து, தாக்குதல் இடம்பெறுவதற்கு பத்து நிமிடங்கள் முன் வரை கிடைக்கப்பெற்ற உளவுத்தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதேவேளை, குறித்த தினம் இரவே சிங்கப்பூரிலிருந்து வேறு இரு விமானங்கள் வந்த போதிலும் அவற்றில் நாடு திரும்ப அவசரம் காட்டாத ஜனாதிபதி மூன்றாவது விமானத்தில் நள்ளிரவிலேயே நாடு வந்து சேர்ந்தததாகவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment