அப்போது என்னைப் பொய்யன் என்றார்கள்: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

அப்போது என்னைப் பொய்யன் என்றார்கள்: விஜேதாச



2016 நவம்பரில் அடிப்படைவாத தவ்ஹீத் அமைப்பு இலங்கையில் தாக்குதல் நடாத்தவுள்ளதாக தான் தெரிவித்த போது அதனை முஜிபுர் ரஹ்மான் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் பொய் எனக்கூறி மறுதலித்தார்கள், இப்போது என்ன ஆனது என கேள்வியெழுப்பியுள்ளார் விஜேதாச.



நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் ஐ.எஸ் பயிற்சி பெற்றிருப்பதாகத் தான் அப்போது வெளியிட்ட தகவல்கள் மறுக்கப்பட்டதுடன் தன்னைப் பொய்யன் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் இப்போது தனது கூற்றுக்கள் மெய்யாகியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

2012 முதல் பொது பல சேனா உட்பட்ட பல கடும்போக்குவாத அமைப்புகளும் முஸ்லிம் சமூகத்தில் தீவிர அடிப்படைவாதம் இருப்பதாக தெரிவித்து வந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment