வெளிநாட்டில் ஆயுத பயிற்சி; ஆர்மி முகைடீனிடம் இராணுவ பயிற்சி! - sonakar.com

Post Top Ad

Friday, 26 April 2019

வெளிநாட்டில் ஆயுத பயிற்சி; ஆர்மி முகைடீனிடம் இராணுவ பயிற்சி!


தேசிய தவ்ஹீதி ஜமாத் பயங்கரவாத குழுவினர் வெளிநாட்டிலேயே ஆயுத பயிற்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், ஆர்மி முகைடீன் என அறியப்படும் முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவரிடமே உள்நாட்டில் இராணுவ பயிற்சிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


வனாத்தவில்லு பகுதியில் இயங்கியது இவ்வாறான பயிற்சி முகாம்களுள் ஒன்றென உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் கடவத்தயில் வாகன விற்பனை நிலையம் ஒன்றிலிருந்தே பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்கொலைதாரியொருவருக்குச் சொந்தமான, வெள்ளம்பிட்டியில் இயங்கிய செப்புத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவரே வெடிகுண்டுகளை மேம்படுத்தி அவற்றை சக்திவாய்ந்ததாக மாற்றியுள்ளதாகவும் கைதானவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment