கொழும்பு தாக்குதல் பற்றி ஆறு மாதங்கள் முன்பே தெரியும்: இந்திய உளவு நிறுவனம் - sonakar.com

Post Top Ad

Monday 22 April 2019

கொழும்பு தாக்குதல் பற்றி ஆறு மாதங்கள் முன்பே தெரியும்: இந்திய உளவு நிறுவனம்


ஆறு மாதங்களுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் ஒருவரை சிறைப்பிடித்து விசாரித்ததன் பின்னணியில் இலங்கையில் பாரிய அளவில் தாக்குதல்கள் திட்டமிடப்படுவது குறித்து தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களை உடனடியாக இலங்கை அரசுக்கு ராஜதந்திர வழிமுறையூடாக வழங்கியதாக தெரிவிக்கிறது இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் National Investigation Agency (NIA).



இதேவேளை, தாக்குதல்தாரிகள் கடல்வழியோக கேரளா மற்றும் தமிழ்நாடு நோக்கித் தப்பி வருவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அறியக் கிடைத்ததன் பின்னணியில் அவற்றை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த நிறுவனத்தை ஆதாரங்காட்சி த ஹிந்து தகவல் வெளியிட்டுள்ளது.

சம்பவம் இடம்பெறுவதற்கு 10 நிமிடங்கள் முன்பாகவும் இலங்கைக்கு உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் அரசில் நிலவும் விரிசல் காரணமாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment