சார்ஜா: காரை எரியூட்டிய இலங்கைப் பணிப் பெண்ணுக்கு சிறை! - sonakar.com

Post Top Ad

Sunday, 14 April 2019

சார்ஜா: காரை எரியூட்டிய இலங்கைப் பணிப் பெண்ணுக்கு சிறை!


ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜா, அல்சயா பகுதியில் வீடொன்றில் பணி புரிந்து வந்த இலங்கைப் பணிப்பெண், வீட்டுரிமையாளரின் மனைவியின் காரினை எரியூட்டியதன் பின்னணியில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.


இப்பின்னணியில், குறித்த பெண்ணுக்கு 5000 திர்ஹம் அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை முடிவில் அவர் நாடுகடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, சிசிடிவி ஆதாரம் ஊடாக இச்செயல் நிரூபிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment