சர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க ஆணைக்குழு - sonakar.com

Post Top Ad

Sunday, 14 April 2019

சர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க ஆணைக்குழு


இலங்கையில் இயங்கி வரும் சர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான பரிந்துரை முன் வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.



தனியார் பாடசாலைகள் பெரும்பாலும் சர்வதேச பாடசாலைகளாகவே இயங்கி வருகின்ற அதேவேளை உள்நாட்டு மற்றும் ஐக்கிய இராச்சிய பாடத் திட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

எனினும், அண்மைக்காலமாக சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் பெருமளவு குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கண்காணிப்புக் குழுவொன்றை உருவாக்க அரச கணக்காய்வாளர்கள் குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment