ஜனாஸா அறிவித்தல்: அப்துல் கலாம் (வாழைச்சேனை) - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

ஜனாஸா அறிவித்தல்: அப்துல் கலாம் (வாழைச்சேனை)

MamXVfg

இன்று காலை பொலன்னருவை,மின்னேரிக்கிடைப்பட்ட தூரத்தில்  நடந்த வீதி விபத்தொன்றில் மாவடிச்சேனை,வாழைச்சேனையை சேர்ந்த அப்துல் கலாம் அகால மரணமானர். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்

அன்னார் வாழைச்சேனையை சேர்ந்த மர்ஹூம்களான சஹாப்தீன் ஹாஜியார் (சாஹிப்போடியார்) பாத்தும்மா பீவி தம்பதிகளின் மகனும்,முபாரக் என்பவரின் வளர்ப்புத் தந்தையும்,மற்றும் அபுல் ஹசன், மர்ஹூம் ஜெமில்,அஹ்மது ஹாஜி,சரிபலி மௌலவி,பௌசுல்,சாதிக்கீன்,சித்திக்கீன்,கயறுநிசா,சல்மா ஆகியோரின் சகோதரருமாவார்.

அன்னாரின் ஜனாசா மேலதிக பரிசோதனைக்காக  பொலன்னருவை போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு ஜனாசா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்பு அறியத்தரப்படும்.

யா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்வான சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக!

தகவல்: வை.எம். பைரூஸ் (மருமகன்)

No comments:

Post a comment