கஞ்சிபானை இம்ரானின் சகா 'பைசர்' தொடர்ந்தும் தடுத்து வைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

கஞ்சிபானை இம்ரானின் சகா 'பைசர்' தொடர்ந்தும் தடுத்து வைப்பு


கஞ்சிபானை இம்ரானின் சகா என பொலிசாரால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் முஹமத் பைசரை 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணையை நடாத்த அனுமதியளித்துள்ளது நீதிமன்றம்.டுபாயிலிருந்து திருப்பியனுப்பப்பட்டிருந்த நிலையில் பைசரை விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர். முதலில் 24 மணி நேரம் தடுத்து வைக்க உத்தரவைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இரு வாரங்கள் விசாரணையைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாகந்துரே மதுஷின் வரவை எதிர்பார்த்து விமான நிலையத்தில் புலனாய்வுத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment