வவுணதீவு தாக்குதலே சஹ்ரான் குழுவின் ஆரம்பம்: பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

வவுணதீவு தாக்குதலே சஹ்ரான் குழுவின் ஆரம்பம்: பொலிஸ்!


கடந்த வருடம் நவம்பர் மாதம் மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இரு பொலிஸ் ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவமே சஹ்ரான் குழுவினரின் முதலாவது தாக்குதல் நடவடிக்கையென தகவல் வெளியிட்டுள்ளது பொலிஸ்.ஐ.எஸ். அமைப்பின் உள்நாட்டு பிரதிநிதிகளாக, தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் இயங்கி வந்த குறித்த குழுவினரே வவுண தீவு தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கின்ற பொலிசார் சஹ்ரானின் சாரதியாகப் பணியாற்றிய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் விசாரணையின் போது தகவல் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனினும், அக்காலப்பகுதியில் ராசாநாயகம் சர்வானந்தன் எனும் கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவரே கொலையாளியென கைது செய்யப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

தற்போது சஹ்ரானின் சாரதியென தெரிவிக்கப்படும் சரீப் ஆதம்லெப்பை கபூர் என அறியப்படும் 54 வயது நபரிடமிருந்து இத்தகவல் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a comment