தம்புள்ள: கல்முனை - சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐவர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

தம்புள்ள: கல்முனை - சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐவர் கைது!


நேற்றிரவு தம்புள்ளயில் மேற்கொள்ளப்பட்டிருந்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கல்முனை - சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த ஐவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.தம்புள்ள பொருளாதார மையம் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதன் பின்னணியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கிலங்கையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அங்கு கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, கடந்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து நாடளாவிய ரீதியில் பெருமளவு கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment