யாழில் சுற்றிவளைப்பு: மூவர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

யாழில் சுற்றிவளைப்பு: மூவர் கைது!யாழ் வடமாராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் ஒரு முஸ்லிம் நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.கடந்த ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியில் நாடளாவிய ரீதியில் தேடல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், நேற்றிரவு கல்முனை - சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து நிந்தவூர் உட்பட கிழக்கிலங்கையின் முக்கிய இடங்களில் முழு அளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏலவே, தம்புள்ள, தர்காநகர், கண்டி உட்பட பல்வேறு நகரங்களில் கைதுகள் இடம்பெற்றுள்ளமையும் தற்சமயம் அவசரகால சட்டம் அமுலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment