முஸ்லிம்கள் தகவல் தந்து உதவ வேண்டும்: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

முஸ்லிம்கள் தகவல் தந்து உதவ வேண்டும்: பொலிஸ்ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து நாடளாவிய சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக 'தவ்ஹீத்' ஜமாத் எனும் பெயர்கொண்ட அமைப்புகள் தீவிரமாக இயங்கிய பகுதிகள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டு வருவதுடன் பொலிசார் முஸ்லிம் சமூகத்திடன் நேரடி கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


இப்பின்னணியில் அளுத்கம உட்பட சில இடங்களில் முஸ்லிம் சமூகத்துடன் சந்திப்புகளை நடாத்தியுள்ள பொலிசார், சமூகத்துக்குள்ளேயே காணப்படும் சந்தேகத்துக்குரிய நபர்கள் பற்றிய தகவல்களை தந்துதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். தம்மிடம் உள்ள பட்டியல்கள் போக, சமூகத்தாருக்கு தெரிந்தவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றால் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு மேலதிக தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியும் என இச்சந்திப்புகளின் போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்களாகத் தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளே ஞாயிறு தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக அறியப்படுகின்ற நிலையில், பல இடங்களில் கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதோடு விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment