பாணந்துறை வீட்டிலிருந்து 'மூன்று' வாகன இலக்கத்தகடுகள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

பாணந்துறை வீட்டிலிருந்து 'மூன்று' வாகன இலக்கத்தகடுகள் மீட்பு!


ஞாயிறு தாக்குதலுக்கு முன்பாக பயங்கரவாதிகள் தற்காலிகமாக தங்கியிருந்ததாகக் கருதப்படும் பாணந்துறை வீட்டிலிருந்து CP CAT 4260, WP CAS 7256  மற்றும் CP CAV 4022 என பதிவிடப்பட்டுள்ள மூன்று வாகன இலக்கத் தகடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.அவற்றின் உண்மைத்தன்மை பற்றி ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, இங்கு தங்கியிருந்தவர்களை ஏற்றிச் சென்றதாகக் கருதப்பட்டு கைப்பற்றப்பட்ட வேனினை விற்பனை செய்த அளுத்கமயைச் சேர்ந்த நபர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மேலும், பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்ற நிலையில் முஸ்லிம் சமூகம் தாமாக முன்வந்து தகவல்களை தந்துதவ வேண்டும் என பொலிசார் வேண்டுகோள் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment