பள்ளிவாசல்களிலும் சோதனை; வரகாபொலயில் வேன்-பொருட்கள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

பள்ளிவாசல்களிலும் சோதனை; வரகாபொலயில் வேன்-பொருட்கள் மீட்பு!


ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் நாடளாவிய ரீதியிலான சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன.


உத்தியோகபூர்வ ரீதியாக வெளியிடப்படும் தகவல்களை விட அதிக கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் இடம்பெற்று வரும் நிலையில் சில முக்கிய இடங்களில் குறிப்பிட்ட அமைப்புகள் சார்ந்து இயங்கும் பள்ளிவாசல்கள், முக்கியஸ்தர்களின் வீடுகள், உறவினர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஆகக்குறைந்தது இரு பள்ளிவாசல்களில் இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், வரகாபொலயில் வீடொன்றில் நடாத்திய சோதனையில் நான்கு 'வோக்கி-டோக்கி'கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வேன் ஒன்றும் பொலிசார் வசப்படுத்தப்பட்டுள்ளது. தெமட்டகொட குடும்பத்தோடு தொடர்புடைய பலர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை தேசிய தவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், சிலோன் தவ்ஹீத் ஜமாத் ஆகிய பெயர்களில் இயங்கும் அமைப்புகளோரு நெருங்கி இயங்குபவர்கள் பொலிசாரினால் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment