வெல்லம்பிட்டியிலேயே 'வெடிகுண்டு' தயாரிப்பு? (படங்கள்) - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

வெல்லம்பிட்டியிலேயே 'வெடிகுண்டு' தயாரிப்பு? (படங்கள்)


ஞாயிறு தாக்குதல் நன்கு திட்டமிட்ட முறையில் நடாத்தப்பட்டுள்ள நிலையில் தெமட்டகொட , மஹாவில கார்டன்ஸ் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரினால் நடாத்தப்பட்டதாக கருதப்படும் தொழிற்சாலையொன்றும் பொலிசாரால் முடக்கப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், செப்புப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டதாகக் கருதப்படும் குறித்த தொழிற்சாலையிலேயே வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கைத் தாக்குதல் தொடர்பில் இந்திய, அமெரிக்க ஊடகங்கள் இதுவரை பல ஆதாரங்களை துரிதமாக வெளியிட்டு வருவதுடன் இலங்கையில் இயங்கிய தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் பல்வேறு சமூக சர்ச்சைகளை உருவாக்கிய ஏனைய தவ்ஹீத் பெயர் கொண்ட அமைப்புகளையும் தொடர்புபடுத்தியே தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment