வவுணதீவு ஆயுதங்கள் மீட்பு: மூவர் கைது - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

வவுணதீவு ஆயுதங்கள் மீட்பு: மூவர் கைது


வவுணதீவு பொலிசார் கொலையே தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தினரின் முதலாவது பயங்கரவாத நடவடிக்கையென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சஹ்ரானின் சாரதியூடாக பல தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ள பொலிசார் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.


இதன் பின்னணியில், கல்முனை பகுதியில் சஹ்ரானின் சித்தார்ந்தத்தைப் பின்பற்றிய தீவிரவாதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு வவுணதீவில் கொலையான பொலிசாரிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நவம்பர் 29ம் திகதி தினேஸ் அழகரத்னம் மற்றும் நிரோசம் இந்திக்க ஆகிய இரு பொலிசார் கொலையானமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment