தெமட்டகொட குடும்பத்தில் ஒருவரை தீவிரமாகத் தேடும் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

தெமட்டகொட குடும்பத்தில் ஒருவரை தீவிரமாகத் தேடும் பொலிஸ்!


ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புபட்டிருப்பதாகக் கருதப்படும் பல முக்கிய அரசியல்வாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்த தொழிலதிபர் ஒருவரின் குடும்பத்தில் ஒருவரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருவதாக அறியமுடிகிறது.அன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த குறித்த நபரின் இரு புதல்வர்கள் ஏலவே நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது மூன்று குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குண்டு வெடிப்பில் பலியானதுடன் மேலும் ஒரு பெண் மற்றும் குழந்தைகளும் இரண்டாவது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், கைதானவரின் இளைய புதல்வரை பொலிசார் தீவிரமாகத் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a comment