தற்கொலைதாரிகளுள் ஒருவன் ஏலவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவன்: கபீர்! - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

தற்கொலைதாரிகளுள் ஒருவன் ஏலவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவன்: கபீர்!


நேற்றைய பயங்கரவாத தாக்குதலை நடாத்திய தற்கொலைதாரிகளுள் ஒருவன் அண்மையில் புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் கைது செய்யப்பட்டு  அரசியல் ஆதரவின் பயனாக விடுவிக்கப்பட்டதாக தமக்குக் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதென தெரிவிக்கிறார் அமைச்சர் கபீர் ஹாஷிம்.


மாவனல்லை புத்தர் சிலை உடைப்புகளின் பின்னணியில் புத்தளத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது வனாத்தவில்லு பகுதியில் ஆயுதங்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்றைய தாக்குதலிலும் பங்கேற்றுள்ளதாக தமக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கபீர் விளக்கமளித்துள்ளார்.

மாவனல்லை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தாம் இயங்கிய காரணத்தினாலேயே தமது செயலாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்றி வருவதாகவும் கபீர் ஹாஷிம் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment