அமல் பெரேரா உட்பட அறுவர் விமான நிலையத்தில் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

அமல் பெரேரா உட்பட அறுவர் விமான நிலையத்தில் கைது


மாகந்துரே மதுஷோடு டுபாயில் கைதாகியிருந்த பாடகர் அமல் பெரேரா உட்பட அறுவர் இன்று இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுஷின் வருகைக்காக பொலிசார் காத்திருந்த நிலையில் கடந்த ஞாயிறு நாட்டை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், குறித்த சம்பவங்கள் பாதாள உலகத்தினரின் வேலையாக இருக்கலாம் எனவும் ஆரம்பத்தில் சந்தேகம் உருவாகியிருந்தது.

இந்நிலையில், இன்று திருப்பியனுப்பப்பட்டவர்களை விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ள குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment