இப்படியான 'தாக்குதலை' எதிர்பார்த்திருக்கவில்லை: பாதுகாப்பு செயலாளர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

இப்படியான 'தாக்குதலை' எதிர்பார்த்திருக்கவில்லை: பாதுகாப்பு செயலாளர்


கிடைக்கப் பெற்ற உளவுத் தகவல்களின் அடிப்படையில் ஆங்காங்கு சில சம்பவங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஞாயிறு தினம் போன்று பாரிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் எதிர்பார்க்கப்படவில்லையெ விளக்கமளித்துள்ளார் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ.தாக்குதல் திட்டம் பற்றி தொடர்ச்சியாக இந்தியா உளவுத் தகவல்களை வழங்கி வந்தமை குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வரும் நிலையில் சம்பவ தினம் 10 நிமிடங்களுக்கு முன்பாகவும் இவ்வாறு எச்சரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

அரசுக்குள் நிலவி வரும் விரிசல் காரணமாக உளவுத் தகவல்கள் முறையாகக் கணிப்பிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கப்படுவதுடன் அரசாங்கம் 'மன்னிப்பு' கோருகின்றமையும் சம்பவங்களில் உயிரழந்தோர் தொகை 310 ஆக அதிகரித்துள்ளதுடன் 500 பேர் வரை காயமுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment