இலங்கை தாக்குதல்கள்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

இலங்கை தாக்குதல்கள்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்!


ஏப்ரல் 21ம் திகதி கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு நகரங்களில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தொடர் பயங்கரவாத தாக்குதல்களை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டாகக் கண்டித்துள்ளது.


கிறிஸ்தவ மக்களின் முக்கிய சமய வழிபாட்டு நாளில் இடம்பெற்ற இத்தாக்குதல் உலக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாதத்தை நிராகரிப்பதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தாக்குதல் தொடர்பில் ஆறு மாதங்களுக்கு முன்பே தமக்குத் தெரியும் எனவும் தொடர்ச்சியாக இலங்கைக்கு உளவுத் தகவல்களை வழங்கி வந்ததாகவும் இந்திய தேசிய உளவு நிறுவனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment