ஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 29 April 2019

ஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு



அவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணிவதற்கு எவ்வித தடையுமில்லையென்பதை பாதுகாப்பு ஊழியர்களின் பிரதானி அட்மிரல் ரவிந்ர விஜேகுணர்வதனவிடம் எடுத்துரைத்துள்ளார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.



விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அட்மிரல், இது தொடர்பில் தாம் முப்படையினருக்கு அறிவித்து இதனால் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

வைத்தியசாலைகள், வீதிச் சோதனைச் சாவடிகளில் அபாயா மற்றும் ஹிஜாப், முக்காடு அணிந்து செல்லும் பெண்கள் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வரும் முறைப்பாடுகளின் பின்னணியிலேயே ஆளுனர் இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்போடு முஸ்லிம் சிவில் அமைப்புகள் நாளை அல்லது மறுதினம் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக ஆளுனர் அசாத் சாலி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment