பவாஸ் 72 மணி நேரம் தடுத்து வைப்பு: மொபைல் வீடியோக்களால் சிக்கல்! - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

பவாஸ் 72 மணி நேரம் தடுத்து வைப்பு: மொபைல் வீடியோக்களால் சிக்கல்!


ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றவுடன் அப்பகுதிகளுக்குச் சென்று தனது கைத்தொலைபேசியூடாக வீடியோ பதிவு செய்துள்ள தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு பிரதானி முஹமத் பவாஸை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் நேரடியாக குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஒப்படைக்கப்படுகின்ற அதேவேளை குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்வோரை பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கைதானவர்களின் எண்ணிக்கை 69 என்கின்ற அதேவேளை ஆகக்குறைந்தது ஒன்பது பெண்கள் அடங்கலாக 154 பேர் கைதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a comment