நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்



கடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


இல்ஹாம் இப்ராஹிம், இன்சாப் இப்ராஹிம் என அறியப்படும் குறித்த நபர்களின் தந்தை தெமட்டகொடயில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட அதேவேளை அவ்வீட்டில் இரு வெடிப்பு சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது. 

இதில் இல்ஹாமின் (இடது) மனைவியே தன் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு வீட்டில் வெடிகுண்டை இயக்கித் தற்கொலை செய்து கொண்டதாக அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment