தாக்குதல்கள் பற்றி முன்கூட்டியே தெரியாது: அமெரிக்கா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

தாக்குதல்கள் பற்றி முன்கூட்டியே தெரியாது: அமெரிக்கா!


ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்காவிடம் முன்கூட்டிய தகவல்கள் இருக்கவில்லையென அந்நாட்டின் இலங்கைக்கான தூதர் தகவல் வெளியிட்டுள்ளார்.தாக்குதல் நடந்து ஒரு சில நிமிடங்களுக்குள் பிரதான தாக்குதல்தாரியான சஹ்ரானின் படம் மற்றும் பெயர் விபரங்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருந்த அதேவேளை சம்பவ தினமும் இறுதியாக 10 நிமிடங்களுக்கு முன்னராக இந்திய உளவுத்துறை இலங்கைக்குத் தகவல் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆறு மாத காலத்திற்கு முன்பாக தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை சிறைப்பிடித்து விசாரித்த போதே இலங்கைத் தாக்குதல்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றதாக இந்தியா தெரிவித்து வருகிறது.

இதேவேளை, நியுசிலாந்து தாக்குதல்களுக்கும் இலங்கைத் தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லையென நியுசிலாந்து பிரதமர் ஜசின்டா இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment