உள்ளூர் பயங்கரவாதிகளின் வெளிநாட்டு தொடர்பு பற்றி ஆராய்வு! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

உள்ளூர் பயங்கரவாதிகளின் வெளிநாட்டு தொடர்பு பற்றி ஆராய்வு!


ஞாயிறு தினம், கொழும்பு - நீர்கொழும்பு மற்றும் மட்டுநகரில் தேவாலயங்கள் மற்றும் கொழும்பின் பிரபல நட்சத்தில ஹோட்டல்கள் மூன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதுலை நடாத்தியுள்ள உள்ளூர் பயங்கரவாதிகளின் வெளிநாட்டு தொடர்புகள் பற்றி ஆராயப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.கிழக்கிலங்கையைத் தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பின் பேரில் இயங்கி வந்த குழுவினர் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக தொடர் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் முகமத் அசாம் எனும் பெயர் கொண்ட நபர் போலி விலாசத்துடன் தாக்குதலுக்குள்ளான மூன்று ஹோட்டல்களிலும் ஒரே தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் தன்னைப் பதிவு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களினால் வெளிநாட்டவர் உட்பட 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் பொலிசார் 13க்கு மேற்பட்டோரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment