ட்ரம்ப் - ஐரோப்பிய யூனியன் - துருக்கி கண்டனம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

ட்ரம்ப் - ஐரோப்பிய யூனியன் - துருக்கி கண்டனம்!


இலங்கையில் இன்றைய தினம் இடம்பெற்ற எட்டு குண்டு வெடிப்புகள் தொடர்பில் சர்வதேச அவதானம் திரும்பியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மற்றும் துருக்கி அதிபர் அர்துகான் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.


இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தீவிரவாத சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு தமது ஆறுதலை தெரிவித்துள்ள உலக தலைவர்கள் மிலேச்சத்தனமான குண்டு வெடிப்புகளை கண்டித்துள்ளனர்.

இதுவரை வெளியான உத்தியோகபூர்வமான தகவல்களின் அடிப்படையில் 194 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேர் வரை காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment