பள்ளிவாசல்கள் சிலவும் தாக்குதல் இலக்கு? பரவும் தகவல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

பள்ளிவாசல்கள் சிலவும் தாக்குதல் இலக்கு? பரவும் தகவல்!


அவ்லியாக்கள் அடக்கஸ்தலம் மற்றும் அதனுடன் அண்டிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்படலாம் எனும் எச்சரிக்கையடங்கிய ஆவணம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.


ஐ.எஸ். அமைப்பினர் இக்கொள்கையுடையவர்கள் எனும் அடிப்படையில் இவ்வாறான இடங்கள் தாக்குதலுக்குள்ளாகும் அச்சம் பற்றிய எச்சரிக்கை அவதானிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை குறித்த ஆவணத்தின் உண்மைத்தன்மையை இதுவரை பொலிசார் ஊர்ஜிதப்படுத்தவில்லை.

எனினும், இதுபோலவே ஞாயிறு தாக்குதலுக்கு முன்பாகவும் எச்சரிக்கை மற்றும் உளவுத்தகவல் அடங்கிய ஆவணப்பிரதிகள் உலாவந்திருந்த நிலையில் பொது மக்கள் அவதானத்துடன் இருப்பது அவசியப்படுகிறது. தவ்ஹீத் கொள்கையாளர்கள் ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளியென அடையாளப்படுத்தும் அதே வாசகம் இவ்வாவணணத்தில் காணப்படுவதோடு சிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பினர் இவ்வாறான தாக்குதல்களை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment