ஹெம்மாத்தகம மௌலவி தொடர்ந்தும் தடுத்து வைப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

ஹெம்மாத்தகம மௌலவி தொடர்ந்தும் தடுத்து வைப்பு!


வரகாபொலயில் மீட்கப்பட்ட சந்தேகத்துக்குரிய வேன் ஒன்றின் பின்னணியில் ஹெம்மாதகமயில் கைது செய்யப்பட்ட மௌலவியை மேலும் இரு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இரு வாரங்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள குறித்த வாகனத்தில் டுபாயிலிருந்து வந்த குழுவொன்று காத்தான்குடி, நீர்கொழும்பு, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளுக்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவினர் 20, 21ம் திகதிகளில் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இவற்றின் பின்னணி பற்றி முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் நிமித்தம் குறித்த நபர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment