நாடளாவிய ரீதியில் கைதுகள்; தொடரும் தேடல்! - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

நாடளாவிய ரீதியில் கைதுகள்; தொடரும் தேடல்!


ஞாயிறு தினம் நாட்டை உலுக்கிய பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து பொலிசார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதிலும் நாட்டின் பல இடங்களிலும் பல்வேறு கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.சில இடங்களில் கைதானவர்கள் விசாரணையின் பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.

மாளிகாவத்தை, தம்புள்ள, அவிஸ்ஸாவெல்ல மற்றும் கிழக்கிலங்கையின் சில இடங்களிலும் இவ்வாறு கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ள அதேவேளை சந்தேக நபர்களின் அடையாள விபரங்களை தொடர்ந்தும் இரகசியமாகவே வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment