
கடந்த ஞாயிறு தினம் அக்கரைப்பற்றுக்கு சென்று திரும்பிய சந்தேகத்துக்குரிய கார் ஒன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த விசேட அதிரடிப்படையினர் தெமட்டகொட இன்சாபினால் நடாத்தப்பட்ட தொழிற்சாலையின் கணக்காளரை கைது செய்துள்ளனர்.
குறித்த வாகனம், கண்டியில் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் அவ்வாகனத்தைத் தான் கொண்டு செல்லவில்லையென தெரிவித்த சாரதி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, சந்தேகநபர் இன்சாபின் கணக்காளர் எனவும் தெரியவந்துள்ள நிலையில் தொடர்ந்தும் அவரைத் தடுத்து வைத்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment