புதிய பாதுகாப்பு செயலாளர் - முஸ்லிம் சிவில் அமைப்புகள் நாளை சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

புதிய பாதுகாப்பு செயலாளர் - முஸ்லிம் சிவில் அமைப்புகள் நாளை சந்திப்பு


புதிய பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட - முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று நாளை இடம்பெறும் என அறியமுடிகிறது.புதிதாக பதவியேற்ற பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற இளைப்பாறிய ஜெனரல் சாந்த கொட்டேகொடவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து அவருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுனர் அசாத் சாலி இச்சந்திப்புக்கான ஏற்பாட்டினை செய்திருப்பதோடு முஸ்லிம் சமூகம் தீவிரவாத கும்பலை அழிப்பதற்க வழங்கி வரும் ஒத்தாசைகளை எடுத்துக்கூறி சமூகத்தின் பாதுகாப்பு விவகாரங்களில் முன்னரையும் விட அதிக அக்கறை செலுத்தும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் உட்பட பிரதான சிவில் சமூக அமைப்புகள் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ள அதேவேளை, மேலும் பல சமூக - மார்க்க அமைப்புகள் ஆளுனர் அசாத் சாலியை சந்திப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment