போக்குவரத்து நெரிசல்: மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் கலந்துரையாடல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 April 2019

போக்குவரத்து நெரிசல்: மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் கலந்துரையாடல்


போக்குவரத்து நெரிசலை குறைக்குமுகமான செயற்திட்டங்கள் குறித்து பொலிசார், பாடசாலை அதிபர்கள் மற்றும் பல்கலை விரிவுரையாளர்ளுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.


கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் தத்தமது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் கவனத்திற்கெடுத்து செயற்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து, ஆளுனர் இதன் போது தெளிவு படுத்தியிருந்தார்.

இதேவேளை, இன்றைய தினம் ஆளுனர் அலுவலக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-AM

No comments:

Post a comment