போதைப் பொருள் இல்லாத இலங்கை: அரசியல் தலைமைகள் உறுதிமொழி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 April 2019

போதைப் பொருள் இல்லாத இலங்கை: அரசியல் தலைமைகள் உறுதிமொழி!


போதைப்பொருள் அற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உட்பட முக்கிய அரசியல் தலைமைகள் இன்று உறுதிமொழியெடுத்துள்ளனர்.


போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அரப்பணிப்பதாக முழு தேசமும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்கும் 'சித்திரை மாத உறுதிமொழி' நிகழ்வு இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்புத்துறை பிரதானிகளுடன் இன - மத பேதமின்றி பெருமளவான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a comment