இமாம் மஹ்மூதுக்கு இங்கிலாந்தில் உயர் கௌரவம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 April 2019

இமாம் மஹ்மூதுக்கு இங்கிலாந்தில் உயர் கௌரவம்


2017ம் ஆண்டு, லண்டன் பின்ஸ்பரி பார்க் பகுதியில் தொழுகை முடிந்து சென்று கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது வேனால் மோதி தாக்குதல் நடாத்திய பயங்கரவாதியை மக்கள் தாக்குவதிலிருந்து காப்பாற்றி சமூக ஒற்றுமையை நிலை நிறுத்திய இமாம் முஹமத் மஹ்மூதுக்கு இங்கிலாந்தின் உயர் கௌரவம்  OBE வழங்கப்பட்டுள்ளது.அவருக்கான பட்டத்தினை இளவரசர் வில்லியம் வழங்கியதோடு அவரது சேவைக்கான பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டிபைச் சேர்ந்த 48 வயது டரன் ஒஸ்போர்ன் எனும் பயங்கரவாதியே இத்தாக்குதலை நடாத்தியிருந்ததோடு குறித்த நபருக்கு 43 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமையும் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment