பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா!


பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கடந்த ஞாயிறு கொழும்பு  - நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் உளவுத் தகவல்கள் இருந்தும் அதனை அரசாங்கம் தடுக்கத் தவறியுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில் அவரையும் பொலிஸ் மா அதிபரையும் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று ஹேமசிறி பெர்னான்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment