வார இறுதியில் வழிபாட்டுத்தளங்கள் செல்வதைத் தவிர்க்கச் சொல்லும் அமெரிக்கா! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

வார இறுதியில் வழிபாட்டுத்தளங்கள் செல்வதைத் தவிர்க்கச் சொல்லும் அமெரிக்கா!கடந்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் தொடர்ச்சியில் நாளை முதல் 28ம் திகதி வரை தொடர்ந்தும் வழிபாட்டுத்தளங்கள் மீதான தாக்குதல் அச்சம் நிலவுவதாகவும் முடிந்தளவு விழிப்புடன் இருப்பதோடு வழிபாட்டுத்தளங்கள் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்துகிறது இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்.

தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பின்னான விசாரணை நடவடிக்கைகளில் இலங்கை அரசுக்கு அமெரிக்காவின் ஒத்தாசையாக இயங்கும் நிலையில் அமெரிக்க தூதரகம் இவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.எனினும், நாளை கொழும்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகைகள் வழமை போன்று இடம்பெறும் என மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளமையும் ஜும்மா செல்வதைத் தவிர்க்குமாறும் பலதரப்பட்ட தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment