தொடர் சிக்கலில் 'ஜெட்' எயார்வேஸ்: நிதியின்றித் தவிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 15 April 2019

தொடர் சிக்கலில் 'ஜெட்' எயார்வேஸ்: நிதியின்றித் தவிப்பு


நிதி திரட்ட முடியாது தொடர் சிக்கலில் தவித்து வரும் ஜெட் எயார்வேஸ் பெரும்பாலும் அனைத்து சேவைகளையும் இரத்து செய்துள்ளதுடன் விமானிகளுக்கும் நான்கு மாத ஊதியம் வழங்கவேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தேர்தலுக்கு மத்தியில் சுமார் 23,000 வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் அரசும் தனியார் வங்கிகளை உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்களிலும் அது முடியாமல் போயுள்ள நிலையில் பணியாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை ஜெட் எயார்வேசின் 24 வீத பங்கினைக் கொண்டுள்ள எதிஹாட் நிறுவனம் முழுமையாகக் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment