ஜாவா லேன் பள்ளிவாசல் மீள் நிர்மாணத் திட்டம் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Monday, 15 April 2019

ஜாவா லேன் பள்ளிவாசல் மீள் நிர்மாணத் திட்டம் ஆரம்பம்


கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மஹிந்த அரசின் போது ஸ்லேவ் ஐலன்ட் குடியிருப்புகள் அகற்றப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டிருந்த ஜாவா லேன், மஸ்ஜிதுல் ஜாமியா மீள் நிர்மாண மற்றும் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



இதனையொட்டி இன்று அடிக்கல் நடும் நிகழ்வு பள்ளி நிர்வாகம் மற்றும் மலே சமூக முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றிருந்தது.


குறித்த பள்ளிவாசல் 1864ம் ஆண்டு மலே சமூகத்தினரின் முயற்சியால் இப்பகுதியில் நிறுவப்பட்டிருந்ததோடு மலே இராணுவ பள்ளிவாசல் எனவும் அறியப்பட்டிருந்தமையும் இப்பகுதியைச் சூழ பெருமளவு முஸ்லிம்கள் குடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



-P . Rahman

No comments:

Post a Comment