மாதம்பை: விசா இல்லாமலிருந்த 'எகிப்திய' பிரஜை கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

மாதம்பை: விசா இல்லாமலிருந்த 'எகிப்திய' பிரஜை கைது!


மாதம்பை பகுதியில் இயங்கி வரும் அரபு பாடசாலையொன்றில் பணியாற்றி வந்த எகிப்து பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு தரித்து நின்ற வேன் ஒன்றையும் வசப்படுத்தியுள்ளனர் பொலிசார்.


கைதான நபர் குறித்த இடத்தில் கற்பிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை எகிப்திலிருந்து வந்த போதிலும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசாவோ கடவுச்சீட்டோ இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் தீவிரவாத அமைப்பின் பின்னணியை ஆராய்ந்து நாடளாவிய ரீதியில் சோதனைகள் இடம்பெற்று வரும் அதேவேளை பல தரப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் உத்தியோகபூர்வ ரீதியாக சிறிய எண்ணிக்கையிலானோரே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் நாட்டில் தற்போது அவசர கால சட்டம் அமுலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment